வான “மது” நீ எனக்கு

This slideshow requires JavaScript.

MEMES BY MATHI NILA 

வான”மது” நீ எனக்கு 16

வான”மது” நீ எனக்கு 15

வான”மது” நீ எனக்கு 14

வான”மது” நீ எனக்கு 13

வான“மது” நீ எனக்கு 12

வான“மது” நீ எனக்கு 11

வான“மது” நீ எனக்கு 10

வான”மது” நீ எனக்கு 09

வான”மது” நீ எனக்கு 08

வான”மது” நீ எனக்கு 07

வான”மது” நீ எனக்கு 06

வான”மது” நீ எனக்கு 05

வான”மது” நீ எனக்கு 04

வான”மது” நீ எனக்கு 03

வான”மது” நீ எனக்கு 02

வான”மது” நீ எனக்கு 01

வான”மது” நீ எனக்கு 01 Teaser 1

வான”மது” நீ எனக்கு 01 Teaser 2

——————————————————————————————-REVIEW BY MADHU HONEY:

வான”மது” நீ எனக்கு

இன்றும் நன்றாக நியாபகம் இருக்கிறது. முதன் முதலில் ஆன்லைனில் கதை படிக்க தேடிக் கொண்டிருந்த போது சில்சீயில் வத்சாலாவின் மனதிலே ஒரு பாட்டு தொடராகப் போய்க் கொண்டிருந்தது. என்ன கதை என்று ஒரு அத்தியாயம் படிக்கப் போய் அது வரை பதிக்கப்பட்ட எல்லா அத்தியாயங்களையும் படித்து முடித்து அடுத்த வாரம் எப்போ வரும் என்று நான் காத்திருந்து எபி போட்டவுடன் முதல் ஆளாகப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது இன்றும் நன்றாக நியாபகம் இருக்கிறது.

வத்சலாவின் எழுத்துக்களில் இருக்கும் மேஜிக் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. எவ்வளவு பிசியாக இருந்தாலும் சிறிது ஓய்வு கிடைக்கும் போது எபி படித்து விட்டு தான் மறுவேலை என்றிருந்த நான் முதல் முறை உடனுக்குடன் படிக்காமல் ஒரு சேர இன்று படித்து முடித்த கதை.

வானமது நீ எனக்கு

முதலில் நன்றி வத்சு. உங்களது கதையில் இரு வரிக் கவிதைகளாக எனது சிறு பங்களிப்பை ஏற்றுக் கொண்டு எனக்கு அங்கீகாரம் கொடுத்ததற்கு. It means a lot to me to be a little part of my favourite magic writer’s story.

வானமது நீ எனக்கு

மது

குடும்ப நாவல்களில் கதாநாயகியின் பாப்புலர் பெயர் அல்லது பெயர் சுருக்கம். மதுமதி, மதுவந்தி, மது ஷாலினி, மதுமிதா அவ்வளவு ஏன் மாதங்கி, மாதவி என்று பெயர் இருந்தாலும் ஹீரோ மட்டும் மது என்று செல்லமாக அழைப்பார்.

ஏற்கனவே ஒரு செல்ப் டப்பாவகிய நான் மது என ஹீரோயின் பெயர் இருக்கும் கதைகளைப் படிக்கும் போது கொஞ்சம் அதிகமாக தட்டிக் கொள்வேன்.

ஆனால் இங்கு மது என்ற பெயர் தலைப்பு மட்டுமில்லாமல் கதையின் செண்டர் பாயின்ட் என்று கதையைப் படித்த பின் தான் தெரிகிறது.

அப்போ கொஞ்சம் அதிகமாக தட்டலாம் என்றால் பாவம் இந்த “மது” கேப்டனையும் டாக்டரையும் ஒரு வழி பண்ணிவிட்டது. அதனால் கொஞ்சம் கோபிக்கலாமா என்று யோசிக்கும் போதே ஸ்ரீனிவாசன் அப்பா ஹ்ம்ம் என்று மிரட்டுவது கேட்கிறது.

அறிவிற்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தை அழகழகாய் சிக்கலான முடிச்சுக்களிட்டு உணர்வுப்பூர்வமாக அதை அற்புதமாக அவிழ்க்கும் வத்சலாவின் சிக்னேச்சர் ஸ்டைல் கதையின் ஒவ்வொரு வரியிலும் ஒளிர்கிறது.

கதை முழுவதும் சிறு சிறு அழகிய தருணங்களாய், மென் உணர்வுகளாய் வத்சாலாவின் மேஜிக் ஆட்சி செய்கிறது.

Appa u r great as always. உருவத்திலும் அரூபத்திலும் எந்த நிலையிலும் மகனுக்கு துணையாக நம்பிக்கையாக நல்வழி காட்டும் கீதையாக இருக்கீங்க. He s really one lucky son.

ஒரு வரியில் கதையை சொல்லி விடலாம். ஆனால் அந்த ஒரு வரிக் கதைக்குள் பதினாறு அத்தியாயங்களின் உணர்வுக் குவியல் வாசித்து ரசித்து உணர வேண்டியது.

As always mesmerised in your magical writing.

வாழ்த்துக்கள் வத்சு.

—————————————————————————————————————————————–

REVIEW BY ALAMU PALANIAPPAN

வத்சலா ராகவன் அவர்களின் “வானமது நீ எனக்கு”.
இப்பத்தான் வாசித்துமுடித்தேன் . “நான் போகிறேன் மேலே மேலே …..” இந்தப்பாடல் இந்தத்தருணத்தில் தோன்றியது. ஏற்கனவே முதல் பாகம் வாசித்த நாட்களில் இருந்த அதே ஒரு நேர்மறை எண்ணங்கள் இப்பொழுதும் தோன்றுகிறது. நாம் அனைவரும் ஏதோ ஒரு சக்தியால் தான் வழிநடத்தப்படுகிறோம் என்று தெரிந்தாலும் அந்த சக்தியாக இந்தக் கதையில் கதாநாயகனின் தந்தை. அதை அவன் ஒவ்வொரு தருணத்திலும் உணர்ந்து கொள்வது அவ்வளவு யதார்த்தம் மற்றும் அழகு. எங்கே தந்தையிடம் விவேக் சொன்னது பொய்த்துவிடுமோ என்று விவேக் பதறியதை விட நான் பதற்றத்துடன் தான் ஒவ்வொரு அத்தியாயத்தையும் கடந்தேன் . மேகக் காதலிகள், காபி கப், ஸடெதஸ்கோப், தந்தையின் சங்கிலி, புத்தகம் , பேப்பர், கைப்பேசி அப்பப்பா விவேகின் காதலை உணர்த்த இத்துணை கருவிகளும் துணை செய்வது அழகோ அழகு. மிக மிக அமைதியாக, அப்பா பிள்ளையாக எங்களை கவர்ந்த கேப்டன் இதில் மதுவிடம் ப்ரபோஸ் செய்வதிலும் எங்களை கவர்ந்தது மட்டுமல்ல பிரமிக்கவும் வைத்துவிட்டார். “வேதாந்த்” இவனுக்கு தனிக்கதை எழுதுங்களேன் ப்ளீஸ் . ராமபிரானுக்கு அணில் செய்த உதவி போல் அவன் எங்கள் கேப்டனுக்கு செய்தது. “ஸ்ரீனிவாசன் ” இந்தப்பெயர் என்னையும் பல விதங்களில் ஆட்டுவித்திருக்கிறது பா. ஆம் என் தந்தையின் பெயர் . இன்றளவும் திருமணம் ஆகி வருடங்கள் கடந்தாலும் எந்த ஒரு விஷயத்தையும் நானும் என் சகோதரிகளும் முதலில் பகிர்வது எங்கள் தந்தையிடம் தான். இதில் எங்கள் அம்மாவுக்கு மிக வருத்தம் உண்டு ஆனால் பெண்பிள்ளைகள் இயல்பு அது இன்று என் மகளும் அதைத்தான் செய்கிறாள் . ஆனால் ஒருமகனுக்கும் தந்தைக்கும் இடையில் இருக்கும் அந்தப் பாசம் எனும் மெல்லிய இழை அதிகம் வெளிப்படாது . நீங்கள் இவ்வளவு அழகாக அதை காட்டி எங்களை நெகிழச் செய்துவிட்டீர்கள் பா. மிக்க நன்றி . நீங்கள் மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துகிறேன் வத்சலா.

Alamu Palaniappan

 

—————————————————————————————————————————————–

REVIEW BY SELVARANI

வானமது நீ எனக்கு.
பாதி கதை படிச்சுட்டு மீதி கதை இன்னும் வரலியேன்னு ஏங்கிகிட்டு இருந்தேன்!அங்கு அங்கு சஸ்பென்ஸ் வச்சு இதய துடிப்பை அதிகரிச்சு கிட்டே இருந்த்தாங்க!கடைசி வரை மதுவா மதுவந்தியா மதுமதியா ஹரிணியா ந்னு நம்மை துடிக்க வச்சுட்டு மேகங்களின் காதலனுக்கு ஒரு மருத்துவரை அழகாக ஜோடி சேர்த்து நிம்மதி பெருமூச்சு விட வச்சுட்டாங்க!
விவேக்கை காதலிக்காத வாசகியும் உண்டோ?!மேகங்களின் காதலன்,இனிமையான குணம்,அப்பாவின் மீது பாசம்,அப்பா பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்ய காத்திருப்பவன்!அவனிடம் பெட் கட்டி நம்மை துடிக்க வைக்க ஒரு மது!அவனை மனதில் வைத்து காத்திருக்கும் ஒரு மது!இந்த பெயர் குழப்பத்தில் நம்மையும் விவேக்கையும் ஆழ்த்தி அவர்கள் சேரும் போது அவ்வளவு இனிமை!பக்கத்தில் அமர்ந்து அவன் கண்ணில் படாமல் மறைவதும்,அவன் சங்கிலியையும் புத்தகத்தையும் அவனிடம் சேர்ப்பிப்பதும்,அவனுக்கு போன் பண்ணும் போது அவனை ஒரு விபத்திலிருந்து காப்பதுமாய்,ஓ மை காட் விவேக் என நம் மனதில் பதிபவள்!
வேதாந்த் ,வீடியோ எடுத்து இருவரையும் ஒன்று சேர்ப்பவன்!மனதில் ஒருத்தியும் அப்பா பார்த்த பெண் வேறுமாய் குழம்பும் விவேக்,அவனுக்கு ஊசி போடும் போது துடிப்பவளை மனதால் உணரும் விவேக் என கதைமுழுதும் நம்மை உணர்ச்சிக் குவியலாய் ஆக்கிரமிக்கிறான்!கடற்கரையில் இருவருமாய் காதலை சொல்வது அவ்வளவு அழகு!இவ்வளவு இடை வெளி இல்லாமல் அடுத்த கதையுடன் வாங்க!
வாழ்த்துக்கள் வத்சலா!

—————————————————————————————————————————————–

REVIEW BY APARNA SANKARA NARAYANAN

ஒரு அழகிய டேக் ஆஃப், சில பல டர்புலன்ஸ்களுடன், மேககாதலிகளின் தூதுடனும், அப்பா என்ற மந்திர சொல் வழி நடத்த இனிதே லான்ட் ஆனார் கேப்டன் விவேக் சீனிவாசன் என் இதயத்தில்…

என்ன ஒரு அழகான கதை, தொடங்கியதும் தெரியல முடிஞ்சதும் தெரியல…அப்படியே வழுக்கி கொண்டு சென்றது மாதிரி இருந்துச்சு..

பள்ளி காலத்தில் நாம் அல்ஜீப்ரா படிச்சிருப்போம், அதுல ப்ளஸ் போட வேண்டிய இடத்துல மைனஸ் போட்டுட்டு ஆன்ஸர் வராம குழம்பி, கடைசில அடடா கவனிக்காம விட்டுட்டோமேன்னு தெரிஞ்சு சரி படுத்தி, விடை கிடைக்கும் போது வருமே ஒரு சந்தோஷம் , அது மாதிரி தான் இருந்திருக்குமோ கேப்டனுக்கு?!!!

டாக்டரே , என்ன சொல்ல.. விடை தெரிந்தும் அதை உணர்த்த வழி தெரியாமல் தவிக்கும் தவிப்பிருக்கே அப்பப்பா.. அப்பா நீங்க தான் சரணம்னு சொல்ல தோணிச்சு

இறுதியில் ” ஒ மை காட் விவேக்” யூ ஆர் சான்ஸெஸ்ன்னு சொல்லாம இருக்க முடியல…

ஆத்மார்த்த நம்பிக்கை ஒரு நாளும் பொய்க்காது என ஸ்ரீனிவாசன் மெய்பிச்சுட்டீங்க..வழக்கம்போல..

மது ஹனி அவர்களின் கவிதைகள் அருமை..

வத்சலா மேம் மீண்டும் ஒரு அழகிய ராகம் மீட்டி மனதை வருடிட்டீங்க…

விவேக்கோட இந்த வானமுது பயணம் மதுவோடு கலந்த முக்கனி போல் சுவையாக இருந்தது..


REVIEW BY JANA MATHY

விவேக் ஶ்ரீநிவாசன்லயே அவனை அணுஅணுவா பார்த்தாச்சு

ஒவ்வொரு வசனத்தையும்ன்னு சொல்றதை விட ஒவ்வொரு எழுத்தையும் ரசிச்சு படிச்சு அவன்லயும் அவன் அப்பா பாசத்திலயும் பிரம்மிச்சு நின்றாச்சு😍♥️

 

அப்புறம் அவன் காதல் புதுசா என்ன இருக்கு

நமக்கு தெரியாததையா நம்ம விவேக் பத்தி புதுசா சொல்லிடப் போறாங்கன்னு போயி பார்த்தால்

அவன் காதல் மீண்டும் அவன் உணர்வுகளோட விளையாடி பார்த்தது போல😒

 

அப்பா கை காட்டுற பெண்ணை தான் திருமணம் செய்வேன்

ஆமா ஶ்ரீநிவாசன் பையன் பத்தி தான் நமக்கு தெரியுமே அவனை விடவும் நல்லாவே😍

 

விவேக்கின் மது

அப்டி சொல்றது தான் பொருத்தமா இருக்கும் 😊

ஶ்ரீநிவாசன் தேர்வு😊

அவனுக்கு கொஞ்சமும் குறைந்தவள் இல்லை😍

மது தான் அவனுக்குன்னு தெரியும்

அப்பா பார்த்த பொண்ணுன்னும் தெரியும்

பைலட் பொண்ணா பார்த்துட்டு வாறேன்னு போனவர் மதுவை பார்த்து அட்ரெஸ் அனுப்புறதும்

டாக்டரை பார்த்து இவனுக்கு காதல் வாறதும்

அந்த சஸ்பென்ஸ் கடைசியில உடையும் வரை அவன் கூடவே நம்மளையும் தவிக்க விடுறதும்

சூப்பர்ன்னு சொல்லவா

இல்ல விவேக்கையே கடைசி வரை கலங்க வைச்சுட்டீங்கன்னு கோபப்படவா

சொல்ல தெரியல😜😜

இதுல்லாம் சொல்லி தெரியாது படிக்கிறப்போ வாற ஃபீலே தனி

அதுனால அதை எங்கூடவே வைச்சிருக்கிறேன்😜😜

எது எப்படியோ திரும்பவும் விவேக்கை கூட்டிட்டு வந்ததுக்கு

Love you Lots Vathsala Venugopalan R ma


REVIEW BY RIYA RAJ

வான “மது” நீ எனக்கு – வத்சலா ராகவன்…..

விவேக் ஸ்ரீனிவாசனின் இரண்டாம் பாகமாய் வந்திருக்கும் இந்த கதை , உணர்வுகளையும் , அழகான திருப்பங்களையும் நேர்த்தியாய் கொண்டு பின்னுப்பட்ட அழகிய காவியம். மனிதனின் உணர்வுகளை விளக்கப்படுத்துவதில் வித்தகர் நம் எழுத்தாளர்.

அரூபமாய் தனது தந்தை என்றும் தன்னை வழி நடத்துவதாய் , தன்னுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணித்து தனது தேவையை நிறைவு செய்வார் என்பதை மட்டுமே மனதில் நிறுத்தி…. அதையே எப்போதும் பின்பற்றும் விவேக் ஸ்ரீனிவாசன் .. தனது ஆசைக்கும், தந்தை மீதான பாசத்திற்கும் இடையே அழகாய் ஒரு சிறு விளையாட்டை … கண்கட்டி வித்தையாய் நிகழ்த்தி இருக்கிறார் ஆசிரியர்.

தன் தந்தை தனக்கென பார்த்திருக்கும் பெண்ணை தனக்கு அவரே அடையாளம் காட்ட வேண்டும் என்று பிடிவாதமாய் நிற்கும் மகனுக்கும் , மகனை சுத்தி விட்டு அவனின் மனதை புரிய வைக்க நினைக்கும் தந்தைக்குமான பாசம் அபரீவிதமானது…

மதுமதியில் துவங்கி அது மதுவந்தியாய் மாறி அனைத்தும் சுபம் என ஆகும் வரை ஒவ்வொரு பகுதியிலும் விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாது நம்மை கட்டி வைத்திருக்கும் விதம் அற்புதம்.

விவேக் வாயிலிருந்து வரும் “டாக்டரே” செம க்யூட்…. மதுவந்தியின் “மை காட் விவேக் ” அவளை அடையாளம் காட்டிய விதம் , ஸ்தெஸ்கோப் மாலையாக்கி தந்தை முன் மாற்றி போடும் நிகழ்வு, சரியாக அவனுக்கு ஏற்பட இருந்த விபத்தை காத்த அந்த போன் கால், பறவைகளிடமிருந்து விமானத்தை காக்கும் விதம், எதிர்பாராமல் எதிரில் வந்த விமானத்தின மீது மோதாமல் விலகி பல உயிரை காக்கும் கணம், தனது தந்தை இழப்பை தாங்க முடியாது தவிக்கும் விவேக்கின் துக்கத்தை நேரில் கண்டு தவிக்கும் பெண்ணவளின் உணர்வுகள், மேகங்களிடம் விவேக் கொள்ளும் காதலும் ஊடலும் , மதுவந்தியிடம் ஸ்ரீனிவாசன் இறுதியாய் கேட்டுக்கொண்ட வாக்கு என அடுக்கிக்கொண்டே செல்லலாம். அத்தனையும் அவ்வளவு அழகு, நேர்த்தி.

வேதாந்த்தை தனது டரம்கார்ட் டாக மாற்றி , தனது மகனின் அனைத்து குழப்பத்தையும் தெளியவைக்கும் விதம் அழகு. ஒவ்வொரு முறையும் காஃபிக்காக மது செய்யும் செயல், அவள் தான் தனக்காக தந்தை பார்த்திருக்கும் பெண் என்றாலும் அவளிடம் நெருங்க மனதால் இயலாமல் தனது தந்தையை இறுதி வரை உறுதிபடுத்த வைக்கும் விதமும் அட்டகாசம்.

அழகான இந்த கதையை நல்கிய எழுத்தாளர் வத்சலா ராகவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி…. வாழ்த்துக்கள்…

வான”மது” நீ எனக்கு♥️♥️

 

3 thoughts on “வான “மது” நீ எனக்கு

  1. வான “மது” நீ எனக்கு.. கேப்டன் .. டாக்டரே… காதல் மழை..

    விவேக்கின் டாக்டரே மிக அழகு.

    அப்பா காட்டும் பெண்ணை மட்டுமே திருமணம் செய்வேன் என்ற விவேக்கின் சபதம், அதே சமயம் தன்னை அறியாமல் டாக்டரிடத்தில் காதலின் விழும் விவேக். விவேக்கின் ஊசலாட்டத்தை உணர்ந்து வேதாந்த் மூலம் தீர்க்கும் விவேக் அப்பா.

    மதுவந்தியின் விவேக் மீதான காதல் , ஸ்ரீநிவாசன் மீதான மதிப்பு என அவளின் கதாபாத்திரம் அருமை. கடைசி வரை விவேக்கின் சபதத்திற்கு மதிப்புக் கொடுத்து தன் மனதைச் சொல்லாமல் தவிக்கும் மதுவந்தி மனதில் நிற்கிறாள்.

    கதையின் கடைசி சில அத்தியாயத்தில் வந்து மனதை நிறைக்கும்
    வேதாந்த். மதுவந்தியிடம் சொன்னது போல் விவேக்கிடம் நேரடியாக பேசாமல், வீடியோ மூலம் மதுவந்தியின் மனதை எடுத்து உரைத்த விதம் சுபெர்ப்.

    விவேக் தடுமாறும் ஒவ்வொரு நிகழுவுகளிலும் அவனின் அப்பா அருவமாக வழிநடத்துவது நெகிழச் செய்கிறது.

    எங்கள் கேப்டன் தன் மேகக் காதலிகளை சாட்சியாக வைத்து டாக்டரிடத்தில் காதல் சொன்னது மதுவந்தியைப் போல் சிரிப்பு வரவழைத்தாலும், கேப்டன் எதிலும் தனித்துவமானவன் என்று காட்டுகிறது.

    கதையின் ஆரம்பம் முதல் கடைசி வரை மழை, காபி, மேகம் மூவரும் நம்மோடு பயணிக்கும் உணர்வு. அந்த அழகிய உணர்வை அனுபவிக்க வைத்த வத்சலாவிற்கு மிகப் பெரிய ஹட்ஸ் ஆப்.

    விவேக் ஸ்ரீநிவாசனில் விவேக் மனத்தைக் கொள்ளை கொண்டால், இந்தக் கதையில் மது நம்மைக் கொள்ளை கொள்கிறாள்.

    விவேக்கின் வானமாகிய மதுவிடத்தில் அவனின் மேகக் காதலிகளோடு விவேக் என்றும் சந்தோஷத்தோடு இருக்க அவனின் அப்பா துணை இருப்பார்.

    விவேக்கின் ஸ்மூத் லேன்டிங் போல் கதை முழுதும் இதமான வார்த்தை பிரயோகங்கள் வத்சலாவின் தனி சிறப்பு.

    உங்கள் தளத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்ற முதல் கதைக்கு வாழ்த்துக்கள்..

    வத்சலாவின் கதைகளில் விவேக் ஸ்ரீநிவாசன் & வானமது நீ எனக்கு இரண்டும் நல் முத்துக்களாக ஜொலிக்கிறது.

    Liked by 1 person

  2. Hi mam…
    Very nice story…
    Padikum pothu flight la pona mathiri iruku…
    Appa magan relationship nala soli irukinga…
    Love and emotion superb..

    Like

Leave a comment