தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே டீசர்

img-20190616-wa0022.jpg

அன்பு தோழமைகளே

வரும் வெள்ளிக்கிழமை உங்கள் எல்லோரையும் எனது புதிய கதை

“தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே “  மூலம் சந்திக்கிறேன்.

அடுத்த வாரத்திலிருந்து இந்தக் கதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை பதினோரு மணிக்கு நமது தளத்தில் பதிவேற்றப்படும்

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே“ கதைக்கான ஒரு சிறு முன்னோட்டம்.

———————————————————————————————————————————

“கண்ணாமூச்சி ஏனடா?” பாட்டு என்ன ராகம் சொல்லு என்பான்

“சஹானான்னு நினைக்கிறேன்”  கொஞ்ச நேரம் அந்த பாட்டை பாடி பார்த்துவிட்டே சொல்வேன்.

“அருமையா பாடறே பாப்பா. இங்கே மண்டை காயுது. உன் குரல் கேட்டா ரிலாக்ஸ் ஆகிடும். கேள்வி கேட்டா நீ உடனே பாடுவே அதுக்குத்தான் கேட்டேன்.” என்பான் ரசிப்பான குரலில். “ஆனா கண்ணாமூச்சி ஏனடா சஹானா இல்லை. நாட்டகுறுஞ்சி” என்பான் கண்சிமிட்டி.

——————————————————————————————————————————

“நடு வானத்திலே ஃப்ளைட்லே வெச்சு ரெண்டு பேரை சாத்து சாத்துன்னு சாத்தியிருக்கார் உன்னோட ஃபேவரிட் இசையமைப்பாளர். தெரியுமா?”

முன்பெல்லாம் என்னை கிண்டலடிப்பார்கள் எனது அலுவலக தோழிகள். அப்போது நான் அவனை சந்தித்திருக்கவில்லை.

யார் மீதும் எதற்காகவும் கை நீட்டுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததே இல்லை. அது யாராக இருந்தாலும் சரி.

எப்போதுமே கோபம் அவனது பலவீனம். ஆனால் அந்த கோபக்காரனுக்குள் இப்படி ஒரு இசை எப்படி ஊற்றெடுக்கிறது என்பது நான் வியந்த ஒரு விஷயம்.

—————————————————————————————————————————————

இருவரும். விமானத்தில் ஏறி இருக்கையை அடைவதற்குள் எங்கள் இருவரையும் அடையாளம் கண்டுக்கொண்டனர் பல பயணிகள். நட்பான புன்னகைகளும், கை குலுக்கல்களும் தொடர்ந்தன.

“எப்போ சார் ரெண்டு பேருக்கும் கல்யாணம்?” கேட்டவர் எங்களுக்கு பரிச்சியமான ஒரு திரைப்பட இயக்குனர்.

“கல்யாணமா? எங்க ரெண்டு பேருக்கா?” கேட்டவன் கலகலவென  சிரித்தான் “நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு உங்களுக்கு எப்போ சொன்னோம்?”

“தனியா சொல்லணுமா என்ன? அதான் மலரே மௌனமா உங்களோட மட்டும்தான் பாடுவேன்னு மேடம் மேடை போட்டு சொன்னாங்களே?” விடவில்லை அவர். மெல்ல மெல்ல மாற்றம் கொண்டது அவன் முகம்.

——————————————————————————————————————————

 

 


4 thoughts on “தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே டீசர்

  1. Wow amazing teaser. Looking forward for it ma’am. Btw unga twin stories enachu ma’am? Side trackla athayum parungalen 😉

    Like

Leave a comment